Wednesday, November 10, 2010

உ.ச‌காய‌த்தை மீண்டும் கலெக்டராக நியமிக்க தமிழக ஆயர் பேரவைத் தலைவர் கருணாநிதிக்கு கடிதம்

நாமக்கல் கலெக்டராக இருந்த உ.சகாயம் அவர்கள் பயிற்சிக்கு சென்றிருந்த நேரத்தில் திடீரென மாற்றப்பட்டார். இந்த மாற்றம் குறித்து தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது.
மாண்புமிகு முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளுக்கு!

வ‌ண‌க்க‌ம்.

நாமக்கல் மாவடட்த்தின் ஆட்சியராக கடந்த இருபத்தேழு மாதங்களாகத் திறம்படத் பணியாற்றி, தமிழக முதல்வராகிய தங்களின் பாராட்டுதலைப் பெற்று, பின்தங்கிய மாவட்டமான நாமக்கல் மாவட்டம் பல்துறைகளில் வளர அயராது பாடுபட்ட உயர்திரு. உ.சாகயம் அவர்கள், தலைமைச் செயலாளர் திரு.மாலதி அண்மையில் பிறப்பித்த உத்தரவின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்ற அரசின் மாவட்ட முதன்மை ஊழியராகத் திறம்படப் பணியாற்றி தங்களின் ஒவ்வொரு கனவு திட்டத்திற்கும் தன்னையே அர்ப்பணித்து, அதனைத் தமது நாமக்கல் மாவட்டத்தில் திறம்படச் செயல்படுத்தி, மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தங்களின் பாராட்டைப் பெற்றவர். எந்தச் சூழ்நிலையிலும் இலஞ்சம் வாங்காமல், எந்தச் சமயத்திலும், எதற்கும் விலை போகாமல் மிகச் சிறந்த அரசு ஊழியராகப் பணியாற்றி தனது ஆட்சியர் பதவிக்கு அழகும், பெருமையும் சேர்த்தவர். கிராமங்களைத் தேடி, கிராமங்களில் ஏழை எளிய மக்களோடு தங்கி, அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கி, மக்களை அரசோடும், அரசை மக்களோடும் ஒன்றிணைக்க புதுமையான அணுகுமுறையை ‘கிராமங்களில் தங்குவோம்’ என்ற திட்டத்தின் வழியாகக் கடைப்பிடித்தவர்.  மகத்தான மக்கள் பணி செய்து, தாங்கள் கண்ட கனவான கிராம விடியலைச் செயல்படுத்தியவர். மேலும் படிக்க......

1 comment:

Anonymous said...

மன்னிக்கவும்! தங்கள் அனுமதியின்றி வெளியிட்டமைக்கு! தங்கள் இடுகையில் உள்ள ஞாயம் என் மனதில் பட்டது, ஏற்கெனவே அய்யா உ சகாயம் அவர்களை பற்றி, சேவையை நான் 2-3 மாதங்களுக்கு முன் சில இடுகைகளை சமர்ப்பித்துள்ளேன்! உலகெங்கிலுமுள்ள ஆயிரக்கணக்கான நம் தமிழ் சகோதரர்கள் படித்து அவரின் சேவையை பாராட்டியுள்ளனர். (Reference- Realtime View- FEEDJIT Live)

Post a Comment