Tuesday, June 18, 2013

சிறுநீரக மோசடி...., பணத்திற்காக விலைபோன டாக்டர்கள்..., வெளிவராத பின்னணி தகவல்கள்....

கடந்த ஒரு வாரமாகவே சிறுநீரக (எ) கிட்னி மோசடியை பற்றித்தான் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி - உட்பட நான்கு மாவட்டங்களிலும் பரபரப்பு பேச்சாக பேசப்படுகிறது..

தர்மபுரியில் கைது படலம் நடந்தாலும் இதன் ஆரம்ப கைது புள்ளி என்னவோ நாமக்கல் மாவட்டம் பெரியமணலியும், குமாரபாளையந்தான் என்கிறது காவல்துறை வட்டாரம். பிடிப்பட்ட கிட்னி மோசடி குமபலின் மூளையாக செயல்பட்ட அய்யாவு சங்ககிரியை சேர்ந்தவர். தனது சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்களையே, அதுவும் ஏழையாக பார்த்து பிடித்து, அவர்களை பணத்தாசை காட்டி மயக்கி கிட்னி தானம் கொடுக்க வைத்து மோசடியில் ஈடுப்பட்டிருக்கிறார் அய்யாவு.

இதுவரை கிட்னி மோசடியில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யபட்டிருக்கின்றனர். அதில் மருத்துவரான சேலம் டாக்டர் கணேசன் என்பவரும் அடக்கம். கைது செய்யபட்டவர்கள் ஜெயிலில் அடைக்கபட்டாலும், கிட்னி மோசடி விவகார விசாரணை தர்மபுரியில் தொடர்கிறது. இந்த நெட்வெர்க்கில் அய்யாவுதான் மெயினான மூளையாக செயல்பட்டிருக்கிறார். டாக்டர் கணேசனும் சங்ககிரி பக்கந்தான் சொந்த ஊர் என்பதால் அய்யாவுக்கும், கணேசனுக்கு நல்ல பழக்கம் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்கிறது. அந்த பழக்கந்தான் இந்த மோசடிக்கு வித்திட்டு இருக்கிறது. Read More....

Sunday, June 9, 2013

கல்லூரி...கன்சல்டன்சி...கமிஷன்...அடிதடி... கொலை.... - நாமக்கல் கல்லூரிகளின் மறுபக்கம்...!

‘‘ காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை, சக கல்லூரி மாணவர்கள் கைது..?’’ இரண்டு மாதங்களுங்கு முன் நாமக்கல் மாவட்ட பரபரப்பு செய்தி இது. நாமக்கல் மாவட்டத்தில் பிரபலமான கல்வி நிறுவனத்தில் படித்த கேரள மாணவர் தீபக் கார் ஏற்றி கொலை செய்யபட்டடார். கேரள மாணவர்கள் கோஷ்டி தகராறில்தான் இந்த வன்ம கொலை நடந்ததாக எல்லா முன்னணி பத்திரிக்கையிலும் தலையங்கம் எழுதப்பட்டது. காவல்துறையோ காசுக்காக கண் முன் நடந்த, நடக்கிற வழக்கையே மாற்றி எழுதும். குற்றவாளிகள் கையில் கிடைத்தால் விடுமா..? பத்திரிக்கை கதையையே போலீசும் ஃபாலோ-அப் பண்ணியது.

ஆனால்..நடந்தது கமிஷன் கொலை... என்பதுதான் உண்மை. அரசியலில்தான் டெண்டர், கமிஷன் என்று கொலை வரை நீளும் கொடூரத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. ஆனால்...

கல்லூரியில் கிடைக்கும் கமிஷனுக்காக... ஒரே கல்லூரி, ஒரே  மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தனது சக கல்லூரி, சக மாநில மாணவரையே காரை ஏற்றி கொன்றது வெளிச்சத்துக்கு வரவில்லை. மாறாக கோஷ்டி பூசல் கொலையாகத்தான் விசயம் வெளிவந்தது. வெளிச்சத்துக்கு வந்த சில விசயங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அந்த கல்லூரி-யை குறை சொல்வதோ, சட்டத்தை கல்லூரி வளைத்துவிட்டது என்று சொல்வதோ நமது நோக்கமல்ல.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரும்பலான கல்லூரிகளில் இந்த கமிஷன் வேலை நடக்கிறது. ‘மாணவர்கள் கமிஷன் வாங்கி கொண்டு ஆட்களை சேர்த்துவிடலாம்.’ என்பதை அந்தந்த கல்லூரி நிர்வாகமே தூண்டுகிறது என்ற உண்மையை சொல்லுவதுதான் நமது எண்ணம்.

நாம் கல்லூரி கமிஷன் அலசல்களை பார்ப்பதற்கு முன், மாணவர் கொலையை கொஞ்சம் பார்த்துவிடலாம்..? Read More....

Sunday, June 2, 2013

தே.மு.தி.க எம்.எல்.ஏ சாந்தி விலை போனாரா..? விலை பேசபட்டாரா..?’- கொதிப்பில் நாமக்கல் தேமுதிகாவினர்...!

ஸ்மால் கேப்-பில் அம்மாவின் கைகளில் அடைக்கலமாகி யிருக்கிறார் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ சாந்தி ராஜமாணிக்கம்...

மதுரை சுந்தர்ராஜன், பேராவூரணி அருண்பாண்டியன், திட்டக்குடி அன்பழகன், திருநெல்வேலி மைக்கேல் ராயப்பன், செங்கம் சுரேஷ் இந்த வரிசையில் ஆறாவது இடத்தில் அம்சமாக உட்கார்ந்து விட்டார் சேந்தை எம்.எல்.ஏ சாந்தி..!

கடந்த 29-ந் தேதி அம்மா-வை தலைமை செயலகத்தில் மீட் பண்ணிய சாந்தி, தொகுதி வளர்ச்சிக்கு சந்திப்பதாக, தேமுதிக பாதையை விட்டு விலகியவர்களின் வழக்கமான அதே பதிலை சொல்லிவிட்டு காரில் பறந்தார். அம்மா-வை சாந்தி சந்தித்து பேசியபோது ‘ உன்னை என் பிள்ளை மாதிரி பார்த்துகொள்வேன். நீ கவலைபடதே..!’ என்று ஜெயலலிதா சொன்னதால் சாந்தி தரப்பு மிகவும் மகிழ்ச்சி கொண்டுள்ளது. Read More.....

Saturday, June 1, 2013

கோழிப் பண்ணைத் தொழில் அழியும் அபாயம்..! – பின்னணியில் பெரும் முதலாளிகள், அதிர்ச்சி ரிப்போர்ட்…!

நாமக்கல் என்றாலே கோழிப் பண்ணைகளும், முட்டையும் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். ஒரு காலத்தில் 7000-த்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் இருந்த நாமக்கல்லில் தற்போது வெறும் 700 பண்ணைகள்தான் இருக்கின்றன. அன்று இருந்த குறும்பண்ணையாளர்கள் முக்கால்வாசி பேர் இன்று இல்லை. ஏன்..? இன்று நாமக்கல்லில் இருக்கும் பண்ணைகளில் பெரும் பண்ணையாளர்தான் அதிகம் இருக்கிறார்கள். அந்த பெரும் பண்ணை முதலாளிகளும் பல தொழில் புரியும் ஜம்பாவன்கள். காசுக்காக கோழி பண்ணை தொழில் செய்யும், செய்து கொண்டிருக்கும் இந்த பெரும் பண்ணையாளர்கள் சிறிய பண்ணையாளர்களை கபளீகரம் செய்தது எப்படி..? குறும்பண்ணையாளர்கள் வெறும் 100 பேர்தான் தற்போது நாமக்கல்லில் இருக்கிறார்கள். Read More....