நாமக்கல் கலெக்டராக இருந்த சகாயத்தால் தொடங்கப்பட்ட திருச்செங்கோடு உழவன் உணவகம் அதிகாரிகளின் இடையூறால் தொடர்ந்து நடைபெறுமா? என விவசாயிகள் சந்தேகமடைந்துள்ளனர்.
விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தரகர்களே லாபம் பெறுவதை தடுக்கும் பொருட்டு விவசாயிகளையே முதலாளிகாளுக்கும் முயற்சியாக அப்போதைய நாமக்கல் கலெக்டர் சகாயத்தினால் கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி நாமக்கல் உழவர் சந்தையில் உழவன் உணவகம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தினை மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தொடங்கி வைத்தார். இதேபோல் அக்டோபர் 23 ம் தேதி திருச்செங்கோடு உழவர் சந்தையிலும் உழவன் உணவகம் விரிவுபடுத்தப்பட்டது.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பூட்டப்பட்ட பொருளாக விற்கும் பொழுது நல்ல லாபம் அடைவார்கள் என்ற நோக்கில் துவங்கப்பட்ட இந்த உழவன் உணவகங்களில் சோளப் பணியாரம், ராகி களி, ராகி தோசை, கீரை இட்லி, அதிரசம்,காய்கறி பக்கோடா, உளுந்தங்கஞ்சி, சுண்டல், ஒப்பிட்டு, ஆட்டுகால் கிழங்கு சூப்பு, கீரை சூப்பு, எள்ளுரண்டை, புட்டு மாவு என பல்வேறு இயற்கையான கிராம உணவு வகைகளை விவசாயிகள் தாங்களே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
காலை நேரத்தில் காய்கறிகள், பால் வகைகள், நாட்டுக் கோழி என விற்பனை நடைபெறும் உழவர் சந்தை காலை 11 மணியுடன் முடிவடைந்து விடும். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை உழவன் உணவகம் நடைபெறுகிறது.
நாமக்கல், திருச்செங்கோடு உழவன் உணவகத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஓர் ஆண்டு முடிவதற்குள்ளாக ரூ.1.5 கோடி ரூபாய் உணவு பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது. மேலும் படிக்க....

No comments:
Post a Comment