Thursday, October 28, 2010

அசினுக்காக இரவு பகலாக நடித்த விஜய்

ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் கவனம் செலுத்துவார் விஜய்.அவர் நடிக்க வந்தபிறகு இந்த அளவுக்கு விடாப்பிடையாக அதுவும் ஒரு கதாநாயகிக்காக தூக்கம் இழந்து விஜய் நடித்தது இந்த படத்திற்கு மட்டுமே என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள். மேலும் படிக்க......

சத்யம் ராஜூ தலைமையில் சிறைச்சாலைக்குள் பிபீஓ சென்டர்

ஐதராபாத், மோசடி புகாரில் சிக்கிய சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவின் ஜாமீனை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்திருப்பதை தொடர்ந்து, ஆந்திர சிறைச்சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் பிசினஸ் புராசஸ் அவுட்சோர்சிங் (பி.பீ.ஓ.) சென்டரை வழிநடத்திச் செல்ல ராஜூவின் நிர்வாகத் திறமையை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஊழல் புகாரில் சிக்கிய சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூ கடந்த ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டார். நீண்ட சிறைவாசத்துக்குப்பின் கடந்த மாதம் ஐதராபாத் ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் இந்த மனுவை விசாரித்து, சத்யம் ராஜூவின் ஜாமீனை ரத்து செய்து தீர்ப்பளித்தது. நவம்பர் 8ம் தேதிக்குள் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

Wednesday, October 27, 2010

அனுஷ்கா அதிரடி, அதிர்ச்சியில் இயக்குனர்கள்

தெலுங்கில்
அருந்ததி உட்பட பல படங்களில் அனுஷாவை மையமாக வைத்துத்தான் கதை பண்ணியுள்ளனர். அதனால் தமிழிலும் அதே போன்ற கதைகள் தனக்கு கிடைக்குமா? என சில இயக்குனர்களிடம் நூல் விட்டு வருகிறாராம் அனுஷ்கா. தமிழில் இது சாத்தியமில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் என்னை நடிக்க வைத்தால் அந்த படத்தை தெலுங்கிலும் விற்பனை செய்ய தான் உதவி செய்வதாகவும் கூறி வருகிறார் அனுஷ்கா. அப்படியென்றால் உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் டம்மி ஹீரோ யார்? என்றால். மேலும் படிக்க....

Tuesday, October 26, 2010

தொழிலில் உஷாரான தமன்னா!

தமிழில் மார்க்கெட் இறங்கு முகம் என்றதும் தெலுங்கில் ஸ்ட்ராங்காக காலூன்றிவிட்டார் தமன்னா. தற்பொழுது தமிழில் கார்த்திக்குடன் சிறுத்தை படத்தில் நடித்து வருபவர், தெலுங்கில் நாக சைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன் போன்ற முன் வரிசை இளசுகளின் படங்களில் அதிரடியாக வாய்ப்பினை பெற்றுவிட்டார். மேலும் படிக்க....

Monday, October 25, 2010

தேர்தலில் நிற்க தொகுதி தேடும் துணை சபாநாயகர்

 நாமக்கல் கலெக்டராக இருந்த உ.சகாயத்தை பதவி மாற்றம் செய்து அரசியல் பழிதீர்த்து கொண்ட துரைசாமியை பழிவாங்க சில சமூக அமைப்புகள் தேர்தலில் அவருக்கு எதிராக பிரச்சாரம் மூலம் களம் இறங்க தயாராகி வருகின்றன.

இந்த வருத்தத்தை விட தனக்கு எதிராக வீரபாண்டியாரும், நாமக்கல் காந்திசெல்வனும் பண்ணும் பாலிடிக்ஸ்தான் ‘துணை’யை மத்தளமாக இடிவாங்க வைத்திருக்கிறது என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். மேலும் படிக்க.....

Friday, October 22, 2010

ரத்தசரித்திரத்தால் ஆந்திராவில் போராட்டம் வெடித்தது

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவான ரத்தசரித்ரா ஆந்திராவில் நேற்று வெளியானது. இந்த படத்தில் விவேக் ஓபராய் மற்றும் சூர்யா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் படுகொலை செய்யப்ப்பட்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ., பரிடாலா ரவீவீந்தரா அவருடைய எதிரி மத்தல செருவு சூரி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் அதன் விளைவாக நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாக கொண்டு ரத்தசரித்திரம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க....

Thursday, October 21, 2010

பிரிதிவிராஜை கைவிட்ட ப்ரியாமணி

ரத்த சரித்திரம் படத்தில் நடித்தபோது இந்திய் நடிகர் விவேக் ஓபராயும், ப்ரியாமணியும் அடித்து விளையாடும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களாகிவிட்டனராம்.

தனது நட்பை மேலும் வெளிப்படுத்தும் விதமாக ரத்த சரித்திரத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்ற பொழுது விவேக் ஓபராயை சென்னைக்கு அழைத்து வந்து தனது உறவினர்கள் படைசூழ ஸ்டார் ஓட்டலில் அசைவ விருந்து வைத்தாராம் ப்ரியாமணி. மேலும் படிக்க.....

தோல்வி பயத்தில் நடிகர் விக்ரம்

விக்ரம் பெரிய அளவில் எதிர்பார்த்த ராவணன் படம் ஏமாற்றி விட்டதால் அவர் தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் வெடியை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். ஒருவேளை இந்த படமும் தோல்வியடைந்தால் தனது மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடும் என்று உள்ளூர ஆடிப் போயிருக்கிறார் சீயான்.  மேலும் படிக்க......

Wednesday, October 20, 2010

குழந்தைகள் படமான கேசுவுக்கு விருது வழங்க கேரளா நீதிமன்றம் தடை

கடந்த வருட தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த குழந்தைகள் படமான சிவன் இயக்கிய ‘கேசு’வுக்கு விருது வழங்க கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


கடந்த 2009ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல டைரக்டர் சஞ்சீவ் சிவனின் தந்தை சிவன் இயக்கிய கேசு என்ற குழந்தைகள் படத்துக்கு விருது அறிவிக்கப்பட்டது. அப்போதே இந்த படம் ஹரிக்குமார் என்பவர் இயக்கிய ‘புலர் வெட்டம்’ என்ற படத்தை காப்பியடித்து எடுத்திருப்பதாக புகார் கூறப்பட்டது.  மேலும் படிக்க.....

நயன்தாரா வழியில் ஜெனிலியா.

நயன் தாராவைப் போலவே ஜெனியாவும் தான் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வதில்லை. வலுக்கட்டாயமாக அழைத்தாலும் இந்தி படத்தின் படப்பிடிப்பு இருக்கிறது என்ற பொய்யை சொல்லி டேக்கா கொடுத்து விடுகிறாராம். மேலும் படிக்க.....

Tuesday, October 19, 2010

அமலாக்க பிரிவு நடவடிக்கைக்கு பயந்து நாடு, நாடாக ஓடும் லலித்மோடி

லலித் மோடியிடம் விசாரிக்க மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் தீவிரமுற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயம் காரணமாக லலித்மோடி லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார்.

லண்டனில் கடோகன் சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு வாடகை பங்களாவில் பதுங்கி இருக்கும் லலித்மோடி நாடு, நாடாக சுற்றியபடி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் வீட்டில் குடியேறிய அவர் மே மாதம் மொனாக்கோ நாட்டுக்கு சென்று உலக கார் பந்தயத்தை பார்த்தார். பிறகு இத்தாலி நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஜூன் மாதம் தென் ஆப்ரிக்கா சென்று உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை கண்டுகளித்தார். மேலிம் வாசிக்க...

Monday, October 18, 2010

ரத்தசரித்திரத்தின் கதை

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படம் “ரத்தசரித்திரம்” ஆந்திராவில் உள்ள ராயல்சீமா நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இக்கதை நிஜத்தில் நடந்த கதையாம். அரசியல் தலைவராக விவேக் ஓபராய் நடித்து இருக்கிறார். உலக ரீதியான ஒரு முக்கிய கருத்தை கொண்ட படம் இது. பல மனித உணர்வுகளை இந்த படத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளதாம்.         மேலும் படிக்க...

நாமக்கல் கவிஞர் வரைந்த ஓவியம்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஒரு சிறந்த கவிஞர் என்பது அனைவரும் அறிந்தது. அவர் சிறந்த ஓவியர் என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்தது.மேலும் பார்க்க....

Friday, October 8, 2010

காது கேளாதவருக்கான செல்போன் – புதுமைக் கருவியைக் கண்டு பிடித்து திருச்செங்கோடு மாணவர் சாதனை

திருச்செங்கோடு, காது கேளாதவரும்  செல்போனில் பேசக்கூடிய புதுமைக் கருவியைக் கண்டு பிடித்துள்ளார் திருச்செங்கோடு மாணவர்  சுதர்சன்.
திருச்செங்கோடு கூட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் சுதர்சன் (17). இவர் சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில்  எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங்  2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது  தந்தை சிதம்பரம் மெடிகல்  ஸ்டோர்ஸ் வைத்துள்ளார். தாய் புஷ்பா குடும்பத்தலைவி. இவர்களுக்கு சுதர்சன் ஒரே மகன். புதிய கண்டு  பிடிப்புக்களில் ஆர்வம்  கொண்ட சுதர்சன் பல்வேறு கருவிகளை உருவாக்கி பரிசு பெற்றுள்ளார்... மேலும் படிக்க...

Wednesday, October 6, 2010

நடிகை தன்ஷிகாவுக்கு இயக்குனர் வசந்தபாலன் திடீர் தடை

பேராண்மை, மாஞ்சாவேலு படங்களில் நடித்த தன்ஷிகா இப்போது வசந்தபாலன் இயக்கும் அரவான் படத்தில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார்.  இதனால் இது வரை அவரை கண்டுகொள்ளாமல் இருந்த கோடம்பாக்கத்தின் கவனம் இப்போது தன்ஷிகா பக்கம் திரும்பியிருக்கிறது.  சில பிரபல இயக்குனர்களே அவரை தங்கள் படங்களுக்கு புக் பண்ணுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.மேலும் வாசிக்க...

Tuesday, October 5, 2010

உங்கள் குழந்தைகளை பிறருடன் ஒப்பிடாதீர்கள்- நீயா? நானா? கோபிநாத்

பெற்றோர்கள்  தங்கள் மகனையோ அல்லது மகளையோ அடுத்தவர்களுடன்  ஒப்பிடுவது மிகவும் தவறான போக்கு  ஆகும். கல்வி சுமையாக இருக்காமல் கொண்டாட்டமாக இருக்க வேண்டும். தினமும் குழந்தைகளிடம் 15 நிமிட  நேரம் பேசுங்கள். அவர்கள் செய்யும் நல்ல காரியங்களை மனம்திறந்து பாராட்டுங்கள். அவர்களின் கனவுகளை  கேளுங்கள். தனது குழந்தைகளுக்காக பலவற்றை தியாகம் செய்யும் மனப்பாங்கு இந்தியாவில்தான் உள்ளது.cont....