Friday, May 10, 2013

வழிகாட்டிய வறுமை, மருத்துவ கல்விக்கு தடைபோடுமா? ஏங்கி நிற்கும் மாநில முதல் மாணவர்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாநில முதலிடம் பெற்ற மாணவர் ஜெயசூர்யா வறுமை காரணமாக தனது உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளார்.

    நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1189 மதிப்பெண்கள் பெற்று  மாநில முதலிடம் பெற்றுள்ளார் திருச்செங்கோடு மாணவர் ஜெயசூர்யா. மில் தொழிலாளியான இவரது தந்தை செந்தில்குமார் பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்த சாலை விபத்தில் பாதிப்படைந்து கோமா நிலைக்குச் சென்றார். தொடர் சிகிச்சையின் விளைவாக தற்பொழுது சுய நினைவிற்கு திரும்பியும் செயல்படமுடியாத நிலையில் உள்ளார். தாய் ஆனந்தி சிறு சிறு கூலி வேலைகள் செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு குடும்பத்தை நகர்த்தி வருவதுடன் தனது மகனையும், மகளையும் படிக்க வைத்து வருகிறார். மாநில முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஜெயசூர்யா சிறு வயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியாக இருந்து வந்துள்ளார். Read More.....