Friday, July 29, 2011

மந்திரி தம்பியை தேடும் போலீஸ்

நாய் கைல கெடச்ச தேங்கா மாதிரி அரசியல் வாதிங்க கைல சமச்சீர் கல்வி சிக்கிகிட்டு படாத பாடு படற மாதிரி மாணவங்களோட எதிர்காலமும் படாதபாடு படுது... இது எப்பத்தான் அரசியல்வாதிங்க கண்ணுல்ல படுமோ..... பத்தாவது படிக்கிற புள்ளைங்களோட அப்பம்மா தான் பாவம் தூக்கமில்லாம பொழம்பிக்கிட்டு இருக்காங்க.....

சரி இன்னைக்கத்த ரெண்டு தகவலுக்கு வருவோம்.... Read More.....









Thursday, July 28, 2011

பீதியில் அதிமுகவினர்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழைய கோதாவில் களம் இறங்கிய அதிமுகவினருக்கு ஜெயலலிதா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.அடாவடி அரசியல், கட்டப்பஞ்சாயத்து என கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியவர்களுக்கு கட்சியிலிருந்து கல்தா கொடுத்தார் ஜெ.இதனால் ஆடிப்போன ரத்தத்தின் ரத்தங்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி இருந்தனர்.நாளை 30 ம் தேதி நடக்க இருக்கிற. Read More

Wednesday, July 27, 2011

டெலிபோன் பேச்சு பதிவு, திமுக " மாஜி"களுக்கு பேதி.

மண்டபம் முகாமுக்கு தூக்கியடிக்கப்பட்ட முன்னால் உளவு அதிகாரி வீட்ல லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை மேற்கொண்டாங்கல்ல , இந்த சோதனையில உளவு அதிகாரி வீட்லருந்து 32 சிடிக்கள், 8 ஐ-பாட்டுகள், 2 லேப்டாப் எல்லாம் கைப்பத்துனாங்கலாம். இதெ எல்லாம் போட்டுக் கேட்ட போலீசு அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியாம். என்னடான்னா போன திமுக ஆட்சியில இருந்த முக்கிய அமைச்சர்களோட பேச்சு, ஐ.ஏ.ஸு, ஐ.பி.எஸு அதிகாரிகளோட டெலிபோன் பேச்சுகள பக்காவ தெள்ளத் தெளிவா ரெக்கார்டு பண்ணி வைச்சிருந்தாராம் ... Read More...

Tuesday, July 26, 2011

ஜெ., வை பாராட்டிய கருணாநிதி

கோவைல நடந்த திமுக பொதுக்குழுவுல நிறைவுரை ஆற்றின திமுக தலைவர் கருணாநிதி, உரையை முடிக்கும் பொழுது முதல்வர் ஜெயலலிதவுக்கு அவர் ஸ்டைல்ல ஒரு வேண்டுகோள் வச்சாராம் அதுல நீங்க ஆட்சிக்கு வந்து, எங்க ஆட்சியில நாங்க செஞ்சமாதிரியே பல நல்ல திட்டங்களை செயல்படுத்தறீங்க, Read More....

Sunday, July 17, 2011

உ.சகாயத்தின் கனவு தவறா?

நாமக்கல் கலெக்டராக இருந்த சகாயத்தால் விவசாயிகளும் தொழிலதிபர்களாக மாறவேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்டத்தில் உழவன் உணவகம் தொடங்கப்பட்டது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு உழவர் சந்தையில் மாலை நேரங்களில் இந்த  உழவன் உணவகம் செயல்பட்டது.
கலெக்டர் சகாயத்தால் பரிட்சார்த்தமாக தொடங்கப்பட்ட உழவன் உணவகத்தில் விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்காமல் தரகர்களே லாபம் பெறுவதை தடுக்கும் பொருட்டு விவசாயிகளையே முதலாளிகளாக்கும் முயற்சியாக   2010 ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி நாமக்கல் உழவர் சந்தையில் உழவன் உணவகம் முதலில் துவங்கப்பட்டது. Read more..

Friday, July 1, 2011

‘மாதொருபாகன்’

‘மாதொருபாகன்’ என்னும் பெயரைக் கேட்டதும் நண்பர் ஒருவர் ‘சைவ நெடியடிக்கும் தலைப்பு’ என்றார். உண்மைதான். இது சிவனின் பெயர்களுள் ஒன்று. பெண்ணுக்குத் தம் இடப்பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்தநாரீசுவர வடிவத்தைக் குறிக்கும் பெயர். அர்த்தநாரீசுவரன், அம்மையப்பன், மங்கைபங்கன் ஆகிய பெயர்களும் இதே பொருளைத் தருவன. எனினும் எனக்குள் ஒருவித மயக்கத்தை உருவாக்கிய பெயர் ‘மாதொருபாகன்.’ பொதுவாக நாவலை முடித்த பிறகே தலைப்பை யோசிப்பது என் வழக்கம். ஆனால் இந்நாவலை எழுதத் தொடங்கும் முன்பே தலைப்பு எனக்குள் தோன்றிவிட்டது. எனினும் அதை ஒத்தி வைத்துவிட்டுப் பல தலைப்புகளை யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும் இதற்கு ஈடான நிறைவை வேறு எதுவும் தரவில்லை. Read More.....