Tuesday, November 16, 2010

ஊனம் தடையல்ல, வாழ்க்கையில் முன்னேறும் இரண்டு கைகள் இல்லாத பெண்

இரு கைகள் இல்லாத பெண் ஒருவர், தனக்கு தேவையான  அனைத்து வேலைகளை தானே செய்துக் கொள்வதுடன், தந்தைக்கு உதவியாக ஓட்டல் தொழிலிலும் ஈடுபடுகிறார்.

மனிதனுக்கு ஊனம் என்றால், வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். இவர்கள் பெற்றோருக்கு பாரம் என சிலர் நினைக்கின்றனர். ஊனமுற்றவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என, உறவினர்கள் நினைக்கும் இந்த காலத்தில் இரு கைகளை  இழந்த ஒரு பெண் பெற்றோருக்கும் உதவியாக வேலை செய்கிறார்.இந்த இளம்பெண்ணின் பெயர் பரமேஸ்வரி(28). இவர் ஐந்தாவது வரை படித்துள்ளார். பிறவிலேயே இரு கைகள் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் குருவப்ப நாயுடு கண்டிகையில் பிறந்த இவருடைய தந்தை பெயர் மணிவேல்; தாய் ஹெலன்.இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். மூன்று பெண்கள், 2 ஆண்கள். இதில் மூத்தபெண் பரமேஸ்வரி.

மணிவேல் கே.ஜி.கண்டிகை பஜாரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அடுப்பு எரிப்பது, காய்கறி வெட்டி கொடுப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது உள்பட பல்வேறு பணிகளை பரமேஸ்வரி கால்களால் செய்கிறார்.இது தவிர வீட்டில் துணி துவைப்பது, தலைவாரி பூ முடிப்பது,கேஸ் அடுப்பு பற்ற வைப்பது, புத்தகம் படிப்பது, எழுதுவது, மொபைல் போன் பேசுவது உட்பட, அனைத்து வேலைகளையும் அவரே இரு கால்களால் செய்து கொள்கிறார். மேலும் படிக்க......

No comments:

Post a Comment