Monday, July 8, 2013

திவ்யா பிரிவு....., இளவரசன் சாவு......, உண்மையில் நடந்தது என்ன ? - ஓர் அலசல் ரிப்போர்ட்..!

திவ்யா-இளவரசன் காதல் விவகாரம் நாடு தழுவிய கவன ஈர்ப்பை ஏற்படுத்திவிட்டது. திவ்யா சாப்பிடவில்லை என்பதெல்லாம் பத்திரிக்கையில் போஸ்டர் செய்தியாகிவிட்டது. சரி..என்ன பண்ணுவது இரண்டு பேரின் மத்தியில் இருந்த காதல் மேட்டர் பல பேரது வாழ்வாதாரங்களை கபளீகரம் செய்து, இரண்டு உயிர்களை பலி வாங்கி, வாழ்ந்ததற்கு அர்த்தமில்லாமல், வாழ்வதற்கும் அர்த்தமில்லாமல் போய்கொண்டிருக்கிறது... சரி நாம் பிரச்சினைக்கு வருவோம்..?

சரி இளவரசன்-திவ்யா காதல் விவகாரத்தில் என்னதான் பிரச்சினை..? Read More...

Friday, July 5, 2013

பள்ளி வாகன ஆய்வில் அலட்சியம்……பறிபோகும் குழந்தைகளின் உயிர்கள்…….. விழிக்குமா அரசு ?

‘ ஸ்ருதி..’- ஞாபகமியிருக்கிறதா..? அழகான குழந்தை. ஆசையாக யூ.கே.ஜீ படித்துவிட்டு வீட்டுக்கு போய் அம்மாவை அணைத்து அன்பில் திளைக்கலாம் என்று ஆசைப்பட்டு பள்ளி வாகனத்தில் பயணப்பட்ட சின்னஞ்சிறு ஜீவன்…

பயணப்பட்ட பள்ளி பஸ்ஸின் ஒட்டையில் விழுந்து ஸ்ருதி மரணமடைந்த கொடூரத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது..! அப்போதே பள்ளி பஸ்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று பலமான குரல் எழுந்ததால், தமிழக அரசு பள்ளி பேருந்துகளுக்கான கட்டுப்பாடுகள் பலவற்றை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஸ்ருதி மரணமடைந்த சம்பவம் நடந்த உடனேயே பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வை மேற்கொண்டார்கள் தமிழகம் முழுக்க உள்ள போக்குவரத்து துறை ஆய்வாளர்கள். அதன் பிறகு ‘ கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது ஆய்வு’ விசயம். பிறகு ஆய்வை மேற்கொள்ளவில்லை. தற்போது பள்ளி திறந்துவிட்ட நிலையில், பள்ளி வாகன ஆய்வை தமிழகம்  முழுக்க அதிரடியாக செய்து வருகின்றனர் போக்குவரத்து துறை ஆர்.டீ.ஓ-க்கள். Read More.....

Tuesday, June 18, 2013

சிறுநீரக மோசடி...., பணத்திற்காக விலைபோன டாக்டர்கள்..., வெளிவராத பின்னணி தகவல்கள்....

கடந்த ஒரு வாரமாகவே சிறுநீரக (எ) கிட்னி மோசடியை பற்றித்தான் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி - உட்பட நான்கு மாவட்டங்களிலும் பரபரப்பு பேச்சாக பேசப்படுகிறது..

தர்மபுரியில் கைது படலம் நடந்தாலும் இதன் ஆரம்ப கைது புள்ளி என்னவோ நாமக்கல் மாவட்டம் பெரியமணலியும், குமாரபாளையந்தான் என்கிறது காவல்துறை வட்டாரம். பிடிப்பட்ட கிட்னி மோசடி குமபலின் மூளையாக செயல்பட்ட அய்யாவு சங்ககிரியை சேர்ந்தவர். தனது சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்களையே, அதுவும் ஏழையாக பார்த்து பிடித்து, அவர்களை பணத்தாசை காட்டி மயக்கி கிட்னி தானம் கொடுக்க வைத்து மோசடியில் ஈடுப்பட்டிருக்கிறார் அய்யாவு.

இதுவரை கிட்னி மோசடியில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யபட்டிருக்கின்றனர். அதில் மருத்துவரான சேலம் டாக்டர் கணேசன் என்பவரும் அடக்கம். கைது செய்யபட்டவர்கள் ஜெயிலில் அடைக்கபட்டாலும், கிட்னி மோசடி விவகார விசாரணை தர்மபுரியில் தொடர்கிறது. இந்த நெட்வெர்க்கில் அய்யாவுதான் மெயினான மூளையாக செயல்பட்டிருக்கிறார். டாக்டர் கணேசனும் சங்ககிரி பக்கந்தான் சொந்த ஊர் என்பதால் அய்யாவுக்கும், கணேசனுக்கு நல்ல பழக்கம் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்கிறது. அந்த பழக்கந்தான் இந்த மோசடிக்கு வித்திட்டு இருக்கிறது. Read More....

Sunday, June 9, 2013

கல்லூரி...கன்சல்டன்சி...கமிஷன்...அடிதடி... கொலை.... - நாமக்கல் கல்லூரிகளின் மறுபக்கம்...!

‘‘ காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொலை, சக கல்லூரி மாணவர்கள் கைது..?’’ இரண்டு மாதங்களுங்கு முன் நாமக்கல் மாவட்ட பரபரப்பு செய்தி இது. நாமக்கல் மாவட்டத்தில் பிரபலமான கல்வி நிறுவனத்தில் படித்த கேரள மாணவர் தீபக் கார் ஏற்றி கொலை செய்யபட்டடார். கேரள மாணவர்கள் கோஷ்டி தகராறில்தான் இந்த வன்ம கொலை நடந்ததாக எல்லா முன்னணி பத்திரிக்கையிலும் தலையங்கம் எழுதப்பட்டது. காவல்துறையோ காசுக்காக கண் முன் நடந்த, நடக்கிற வழக்கையே மாற்றி எழுதும். குற்றவாளிகள் கையில் கிடைத்தால் விடுமா..? பத்திரிக்கை கதையையே போலீசும் ஃபாலோ-அப் பண்ணியது.

ஆனால்..நடந்தது கமிஷன் கொலை... என்பதுதான் உண்மை. அரசியலில்தான் டெண்டர், கமிஷன் என்று கொலை வரை நீளும் கொடூரத்தை தமிழகம் பார்த்திருக்கிறது. ஆனால்...

கல்லூரியில் கிடைக்கும் கமிஷனுக்காக... ஒரே கல்லூரி, ஒரே  மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தனது சக கல்லூரி, சக மாநில மாணவரையே காரை ஏற்றி கொன்றது வெளிச்சத்துக்கு வரவில்லை. மாறாக கோஷ்டி பூசல் கொலையாகத்தான் விசயம் வெளிவந்தது. வெளிச்சத்துக்கு வந்த சில விசயங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அந்த கல்லூரி-யை குறை சொல்வதோ, சட்டத்தை கல்லூரி வளைத்துவிட்டது என்று சொல்வதோ நமது நோக்கமல்ல.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரும்பலான கல்லூரிகளில் இந்த கமிஷன் வேலை நடக்கிறது. ‘மாணவர்கள் கமிஷன் வாங்கி கொண்டு ஆட்களை சேர்த்துவிடலாம்.’ என்பதை அந்தந்த கல்லூரி நிர்வாகமே தூண்டுகிறது என்ற உண்மையை சொல்லுவதுதான் நமது எண்ணம்.

நாம் கல்லூரி கமிஷன் அலசல்களை பார்ப்பதற்கு முன், மாணவர் கொலையை கொஞ்சம் பார்த்துவிடலாம்..? Read More....

Sunday, June 2, 2013

தே.மு.தி.க எம்.எல்.ஏ சாந்தி விலை போனாரா..? விலை பேசபட்டாரா..?’- கொதிப்பில் நாமக்கல் தேமுதிகாவினர்...!

ஸ்மால் கேப்-பில் அம்மாவின் கைகளில் அடைக்கலமாகி யிருக்கிறார் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ சாந்தி ராஜமாணிக்கம்...

மதுரை சுந்தர்ராஜன், பேராவூரணி அருண்பாண்டியன், திட்டக்குடி அன்பழகன், திருநெல்வேலி மைக்கேல் ராயப்பன், செங்கம் சுரேஷ் இந்த வரிசையில் ஆறாவது இடத்தில் அம்சமாக உட்கார்ந்து விட்டார் சேந்தை எம்.எல்.ஏ சாந்தி..!

கடந்த 29-ந் தேதி அம்மா-வை தலைமை செயலகத்தில் மீட் பண்ணிய சாந்தி, தொகுதி வளர்ச்சிக்கு சந்திப்பதாக, தேமுதிக பாதையை விட்டு விலகியவர்களின் வழக்கமான அதே பதிலை சொல்லிவிட்டு காரில் பறந்தார். அம்மா-வை சாந்தி சந்தித்து பேசியபோது ‘ உன்னை என் பிள்ளை மாதிரி பார்த்துகொள்வேன். நீ கவலைபடதே..!’ என்று ஜெயலலிதா சொன்னதால் சாந்தி தரப்பு மிகவும் மகிழ்ச்சி கொண்டுள்ளது. Read More.....

Saturday, June 1, 2013

கோழிப் பண்ணைத் தொழில் அழியும் அபாயம்..! – பின்னணியில் பெரும் முதலாளிகள், அதிர்ச்சி ரிப்போர்ட்…!

நாமக்கல் என்றாலே கோழிப் பண்ணைகளும், முட்டையும் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். ஒரு காலத்தில் 7000-த்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் இருந்த நாமக்கல்லில் தற்போது வெறும் 700 பண்ணைகள்தான் இருக்கின்றன. அன்று இருந்த குறும்பண்ணையாளர்கள் முக்கால்வாசி பேர் இன்று இல்லை. ஏன்..? இன்று நாமக்கல்லில் இருக்கும் பண்ணைகளில் பெரும் பண்ணையாளர்தான் அதிகம் இருக்கிறார்கள். அந்த பெரும் பண்ணை முதலாளிகளும் பல தொழில் புரியும் ஜம்பாவன்கள். காசுக்காக கோழி பண்ணை தொழில் செய்யும், செய்து கொண்டிருக்கும் இந்த பெரும் பண்ணையாளர்கள் சிறிய பண்ணையாளர்களை கபளீகரம் செய்தது எப்படி..? குறும்பண்ணையாளர்கள் வெறும் 100 பேர்தான் தற்போது நாமக்கல்லில் இருக்கிறார்கள். Read More....

Friday, May 10, 2013

வழிகாட்டிய வறுமை, மருத்துவ கல்விக்கு தடைபோடுமா? ஏங்கி நிற்கும் மாநில முதல் மாணவர்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மாநில முதலிடம் பெற்ற மாணவர் ஜெயசூர்யா வறுமை காரணமாக தனது உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளார்.

    நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1189 மதிப்பெண்கள் பெற்று  மாநில முதலிடம் பெற்றுள்ளார் திருச்செங்கோடு மாணவர் ஜெயசூர்யா. மில் தொழிலாளியான இவரது தந்தை செந்தில்குமார் பத்து ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்த சாலை விபத்தில் பாதிப்படைந்து கோமா நிலைக்குச் சென்றார். தொடர் சிகிச்சையின் விளைவாக தற்பொழுது சுய நினைவிற்கு திரும்பியும் செயல்படமுடியாத நிலையில் உள்ளார். தாய் ஆனந்தி சிறு சிறு கூலி வேலைகள் செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு குடும்பத்தை நகர்த்தி வருவதுடன் தனது மகனையும், மகளையும் படிக்க வைத்து வருகிறார். மாநில முதலிடம் பெற்றுள்ள மாணவர் ஜெயசூர்யா சிறு வயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியாக இருந்து வந்துள்ளார். Read More.....

Friday, April 5, 2013

முன்னாள் அமைச்சர் காந்திசெல்வனை வைத்து பூட்டிய மாணவர்கள்.

திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்தி செல்வன் கலந்து கொண்டு Read More.....

காரால் மோதி பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் கொலை – கொலை செய்த சக மாணவர்கள் 7 பேர் கைது.

ராசிபுரம் அருகே பைக் மீது காரை மோதி தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார். காரில் தப்பிய அதே கல்லூரியில் படிக்கும் 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். Read More....

Wednesday, April 3, 2013

முட்டை விலை வீழ்ச்சி, சில்லரை விற்பனையாளர்களுக்கே லாபம் - கோழிப்பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி அதிகரிப்பால் உரிய விலை கிடைக்காமல் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களின் சம்மேளனத்தின் தலைவர் பி.முத்துசாமி உபதலைவர் வாங்கிலி சுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- Read More....

Saturday, March 30, 2013

முஸ்லீம்களுக்கு மரியாதை செலுத்த, இந்துக்கள் திருவிழா - ராசிபுரத்தில் தொடரும் பாரம்பரியம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் பகுதியில் கைத்தறி நெசவு முக்கிய தொழில் ஆகும். இப் பகுதியில் கைத்தறிக்கு அச்சு கட்டி கொடுக்கும் தொழிலை முஸ்லிம்கள் செய்து வந்தனர்.  கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு  பிளேக் நோயால் இந்த ஊர் மக்கள் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் தாக்கியது.Read More.....

Tuesday, March 19, 2013

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஊடல் பிறந்தது......

சின்னஞ்சிறு சிட்டுக் குருவிக்கும் காதல், கோபம், ஊடல் உண்டு....இதன் காட்சிப் பதிவுகளை காண கிளிக் செய்யுங்கள்.......சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஊடல் பிறந்தது......

Saturday, March 16, 2013

ஐநாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, திருச்செங்கோட்டில்கல்லூரி மாணவர்கள் போராட்டம். ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு.(Video)

இலங்கையில் தனி ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை ஐநா சபையின் மேற்பார்வையில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான பொருளாதார தடை தீர்மானத்தை இந்திய அரசு அமல்படுத்த வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும், ஜெனீவாவில் நடந்து வரும் ஐநா மாநாட்டில் இந்தியா, இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரிக்க வலியுறுத்தி இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி  நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.Read More.....

Wednesday, March 6, 2013

நீதி உள்ள சமூகமாக தமிழ் சமூகத்தை மாற்ற வேண்டும் -உ.சகாயம் பேச்சு

நீதி உள்ள சமூகமாக தமிழ் சமூகத்தை உருவாக்க வேண்டும் என உ.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் பேசிய பேச்சின் ஒலித் தொகுப்பு சங்கமம் இன்டர்நெட் ரேடியோவில் ஒலிபரப்பாகிறது.இந்த ஒலிபரப்பை கேட்க www.radio.mysangamam.com

Thursday, February 28, 2013

நாமக்கல்லில் 12 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு – ஆட்சியர் நடவடிக்கை.

நாமக்கல் நகராட்சி பகுதியில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் லாரி சம்மந்தப்பட்ட பணிமனைகளில் பணிக்கு அமர்த்தி வருவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்  டி.ஜெகந்நாதனுக்கு  இரகசிய தகவல் கிடைத்தது. Read More.......

நான்கு கால்கள்,நான்கு இறக்கைகளுடன் அதிசய கோழிக் குஞ்சு.


சில தினங்களுக்கு முன் குஞ்சு பொரித்தது. மொத்தம், 11 குஞ்சுகள் பொரித்துள்ளது.அதில், ஒரு குஞ்சு மட்டும் நான்கு கால், நான்கு இறக்கையுடன் இருந்தது. மற்ற குஞ்சுகளை போல் ஆரோக்கியமாக உள்ள அந்த கோழிக்குஞ்சு, Read More....

Thursday, January 31, 2013

பேரூராட்சிக்கு கொசுமருந்து தெளிப்பான் வாங்கியதற்கு சேர்மேனுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் - வீடியோ ஆதாரம் இணைப்பு.

நாமக்கல் மாவட்டம்,ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் எந்திரம் வாங்கியதில் முறைகேடு  நடந்துள்ளதாக பேரூராட்சி தலைவரே அதிகாரிகள் மீது வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதன் பேரில் மாவட்ட திட்ட அலுவலர் மாலதி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டார். Read More......

Tuesday, January 29, 2013

பருவ மழை பொய்த்ததால், களையிழந்த காளிபட்டி மாட்டுச் சந்தை. விலை மாடுகள் அடிமாடுகளான அவலம்.

திருவிழா என்றாலே மகிழ்ச்சி வழங்கும் நிகழ்வாக இருப்பதுடன் கிராம மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சந்தையாகவும் திகழும் வகையிலேயே கிராமப்பகுதிகளில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்கள் உள்ளது. அந்த வகையில் கிராமப் பொருளாதாரத்தை நிலை நிறுத்தும் வகையில் திருவிழா காலங்களில் பொதுமக்கள் தங்களது உற்பத்தி பொருட்கள் மற்றும் விளை பொருட்களை விற்கும் சந்தையாகவும் Read More.....

Friday, January 25, 2013

குமாரபாளையம் அருகே பாலியல் தொந்தரவிற்கு ஆளான சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக அலைக்கழிப்பு.

குமாரபாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் 6 வயது மற்றும் 8 வயது சிறுமிகளை பக்கத்து வீட்டில் வசித்து வரும் கல்லூரி மாணவர் சரத்குமார் என்பவர் இரு சிறுமிகளிடமும் ஆட்டுக் குட்டியை பிடித்து தருவதாகக் கூறி தனியே அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.Read More....