முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஆரஞ்சு கேசரி பவுடர், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி, அதில் நறுக்கின சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பிரட்டி 1 மணி நேரம் ஊறவிடவும். மற்றொரு கிண்ணத்தில் தயிர், சிகப்பு கேசரி பவுடர், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, நன்றாக கலந்து வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மசாலாவில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டங்களைப் போட்டு பொரித்து எடுக்கவும். அதிகம் சிவக்கவிடாமல் பொன்னிறமாக பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து எண்ணெய் வடியவிடவும். மேலும் படிக்க.....

No comments:
Post a Comment