Friday, November 26, 2010

மன்மதன் அம்பு வெளிவராத ரகசிய தகவல்கள்

கமல்ஹாசன், மாதவன், திரிஷா, சங்கீதா, ஓவியா நடித்திருக்கும் "மன்மதன் அம்பு" திரைப்படம் குறித்த நமக்கு கிடைத்த சில ரகசிய தகவல்கள் இதோ:-



முன்னாள் கமாண்டோ மேஜர் ஆர். மன்னன் என்ற கேரக்டரில் கமல் நடித்துள்ளார். நட்புக்கும், காதலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் கேரக்டர். திரிஷா நடிக்கும் கேரக்டரின் பெயர் அம்பு ஜாக்ஷி. இந்த படத்தில் திரிஷா சொந்த குரலில் பேசி நடித்திருக்கிறார். மதனகோபால் என்ற தொழிலதிபர் கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். திரிஷாவின் தோழியாக வருகிறார் தீபா. இவர்களை தவிர பாடகி உஷாஉதுப், ஊர்வசி மற்றும் கவுரவ தோற்றத்தில் "களவாணி" ஓவியா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நடிகர் கமல் ....... மேலும் படிக்க....

Thursday, November 25, 2010

இயக்குனர்களுடன் நடிகர் கருணாஸ் மோதல்



கதாநாயகனாகும் முன்பு வரை சிறிய அளவிலான காமெடி காட்சிகள் இருந்தாலும் தவிர்க்காமல் நடித்தார் கருணாஸ். ஆனால் தற்போது தான் காமெடியனாக நடிக்கும் படங்களில் அப்படத்தின் கதாநாயகன் அளவுக்கு தனது கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம். ஒரு வேளை வெயிட்டான ரோல் என சொல்லி பின்னர் இயக்குனர் தனது ரோலை டம்மியாக்கி விட்டால் ஸ்பாட்டிலேயே கொந்தளித்து விடுகிறார் கருணாஸ். தனது கேரட்டரை வலுவாக்கினால் மட்டுமே மேற்கொண்டு நடிப்பேன் என இயக்குனர்களுடன் மோதுகிறார். சமீபத்தில்........  மேலும் படிக்க


Wednesday, November 24, 2010

மாம்பழ பச்சடி

தேவையான பொருட்கள்:

இனிப்பான ஒட்டு மாங்காய்-1, கீறிய பச்சமிளகாய் -3, தேங்காய் துருவல்- 2 டேபிள் ஸ்பூன், வெல்லத் தூள் - அரை கப், உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை   ........... Read More.....

ஓட்டம் எடுத்த ஓவியா

தமிழில் எதிர்பார்த்தபடி பெரிய அளவிலான படவாய்ப்புகள் அமையாததால் கிடைத்த ஒன்றிரண்டு படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு தன்னை அரவணைத்த கன்னட சினிமாவில் முழுநேர கலைச் சேவை புரிய களமிறங்கிவிட்டார் "களவாணி" ஓவியா. தற்போது தன் கைவசம் நான்கு கன்னடப் படங்கள் உள்ளதாக கூறிவந்த ஓவியாவை சமீபத்தில் சென்னையில் காண முடிவதில்லை. மேலும் படிக்க.....

Saturday, November 20, 2010

தேன் – பழ பச்சடி

தேவையானவை:-

ஆப்பிள்-பாதி அளவு, ஆரஞ்சு பாதியளவு, மாம்பழம் கால் துண்டு, வாழைப்பழம் ஒன்று, மாதுளை பாதியளவு, சர்க்கரை அரை கப், ஏலத்தூள் தேவையான அளவு, தேன் ஐந்து டேபிள் ஸ்பூன்  .... மேலும் படிக்க.....

Friday, November 19, 2010

பணத்தை கரைக்கும் மன்மதன் அம்பு!



முன்பெல்லாம் 'பசை'யுள்ள பட நிறுவனங்கள் மட்டுமே வெளி நாட்டுக்குச் சென்று பாடல்காட்சியை எடுக்கும், பின்னர், அது வளர்ந்தது.  கடந்த 10 ஆண்டுகளில், வெளிநாட்டில் பாடல்காட்சி வைக்காத படங்களின் எண்ணிக்கை வெகு குறைவு.  அடுத்தபடியாக, பாடல் கம்போசிங்கிற்காக பாங்காங், சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர் இசையமைப்பாளர்கள்.  இப்போது, வெளிநாடுகளில் பாடல்கள் வெளியீட்டு விழா நடத்துவது பேஷனாகி வருகிறது.  அந்த வகையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல், திரிஷா நடிக்கும் 'மன்மதன் அம்பு' பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் இன்று முதல் பிரமாண்டமாக நடக்கிறது.  முதலில், ஒரு பெரிய கப்பலில் படக்குழுவினர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.  இதற்காக, சென்னையிலிருந்து .. மேலும் படிக்க......

Wednesday, November 17, 2010

தரையில் நீந்தி வந்த விலாங்கு மீன் ( வீடியோ)

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் ரோட்டில் ஐந்தரை அடி உயரமும் இருபது கிலோ எடையும் கொண்ட விலாங்கு மீன் ஒன்று நீந்தி வந்ததாம். இந்த மீனை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.... வீடியோ பார்க்க.....

பாவனாவை கழட்டி விட்ட கவுதம் மேனன்

தற்பொழுது மலையாளம் மற்றும் கன்னடத்தில் நடித்து வரும் பாவனா, விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யும் கவுதம் மேனனிடம் சான்ஸ் கேட்டுள்ளார். ஆனால் முதலில் யோசிக்கலாம் என்ற கவுதம் மேனன் பின்னர் எந்த பதிலும் சொல்லாமல் பாவனாவை தவிர்த்துவிட்டு திவ்யா ஸ்பந்தனாஸை புக் செய்து விட்டாராம். மேலும் படிக்க....

Tuesday, November 16, 2010

ஊனம் தடையல்ல, வாழ்க்கையில் முன்னேறும் இரண்டு கைகள் இல்லாத பெண்

இரு கைகள் இல்லாத பெண் ஒருவர், தனக்கு தேவையான  அனைத்து வேலைகளை தானே செய்துக் கொள்வதுடன், தந்தைக்கு உதவியாக ஓட்டல் தொழிலிலும் ஈடுபடுகிறார்.

மனிதனுக்கு ஊனம் என்றால், வீட்டிலேயே முடங்கி கிடக்க வேண்டும். இவர்கள் பெற்றோருக்கு பாரம் என சிலர் நினைக்கின்றனர். ஊனமுற்றவர்கள் உயிருடன் இருப்பதை விட இறப்பதே மேல் என, உறவினர்கள் நினைக்கும் இந்த காலத்தில் இரு கைகளை  இழந்த ஒரு பெண் பெற்றோருக்கும் உதவியாக வேலை செய்கிறார்.இந்த இளம்பெண்ணின் பெயர் பரமேஸ்வரி(28). இவர் ஐந்தாவது வரை படித்துள்ளார். பிறவிலேயே இரு கைகள் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் குருவப்ப நாயுடு கண்டிகையில் பிறந்த இவருடைய தந்தை பெயர் மணிவேல்; தாய் ஹெலன்.இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். மூன்று பெண்கள், 2 ஆண்கள். இதில் மூத்தபெண் பரமேஸ்வரி.

மணிவேல் கே.ஜி.கண்டிகை பஜாரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அடுப்பு எரிப்பது, காய்கறி வெட்டி கொடுப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது உள்பட பல்வேறு பணிகளை பரமேஸ்வரி கால்களால் செய்கிறார்.இது தவிர வீட்டில் துணி துவைப்பது, தலைவாரி பூ முடிப்பது,கேஸ் அடுப்பு பற்ற வைப்பது, புத்தகம் படிப்பது, எழுதுவது, மொபைல் போன் பேசுவது உட்பட, அனைத்து வேலைகளையும் அவரே இரு கால்களால் செய்து கொள்கிறார். மேலும் படிக்க......

Sunday, November 14, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்: ஆ.ராசா ராஜிநாமா, அதிமுகவினர் கொண்டாட்டம்

எதிர்கட்சிகள் ஏற்படுத்தியுள்ள இக்கட்டான நிலையை அடுத்து கருணாநிதி அலோசனையின் பேரில் மத்திய அமைச்சர் ஆ.ராசா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஆ.ராசாவின் ராஜிநாமாவை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மேலும் படிக்க....

Thursday, November 11, 2010

சீடனில் தனுஷுக்கு ‘டம்மி’ ரோல்

சீடன் படத்தில் தனுஷ் - அனன்யா ஆகியோர் ஜோடி சேர்ந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்த படத்தில் தனுஷ் வெறும் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்து வருகிறாராம். மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் மலையாளத்தில் நடித்தவரே தமிழிலும் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் படிக்க....

அமெரிக்காவில் மர்ம ஏவுகணை – பென்டகன் விசாரணை

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரை பகுதியில் மர்ம ஏவுகணை பறந்தது பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 35 மைல் தொலைவில், கலிபோர்னியா கடல்பகுதி அருகே வானில் ஏவுகணை ஒன்று பறந்தது. அதன் புகை தடத்தை ஹெலிகாப்டரில் சென்ற பத்திரிக்கையாளர்கள், தங்கள் கேமராவில் பதிவு செய்து பென்டகன் அதிகாரிகளிடம் கொடுத்தனர். மேலும் படிக்க.....

இயக்குனர் மிஷ்கினுக்கு எதிராக உதவி இயக்குனர்கள் போர்கொடி

சென்னை,  உதவி இயக்குனர்களை தரக் குறைவாக விமர்சித்து பேசியதற்காக இயக்குனர் மிஷ்கின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உதவி இயக்குனர்கள் பற்றி தரக்குறைவாக விமர்சித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து நேற்று மாலை சங்க அலுவலகத்தில் திரண்டு உதவி இயக்குனர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘இயக்குனர் மிஷ்கின் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அவர்கள் .. மேலும் படிக்க....

Wednesday, November 10, 2010

உ.ச‌காய‌த்தை மீண்டும் கலெக்டராக நியமிக்க தமிழக ஆயர் பேரவைத் தலைவர் கருணாநிதிக்கு கடிதம்

நாமக்கல் கலெக்டராக இருந்த உ.சகாயம் அவர்கள் பயிற்சிக்கு சென்றிருந்த நேரத்தில் திடீரென மாற்றப்பட்டார். இந்த மாற்றம் குறித்து தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது.
மாண்புமிகு முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளுக்கு!

வ‌ண‌க்க‌ம்.

நாமக்கல் மாவடட்த்தின் ஆட்சியராக கடந்த இருபத்தேழு மாதங்களாகத் திறம்படத் பணியாற்றி, தமிழக முதல்வராகிய தங்களின் பாராட்டுதலைப் பெற்று, பின்தங்கிய மாவட்டமான நாமக்கல் மாவட்டம் பல்துறைகளில் வளர அயராது பாடுபட்ட உயர்திரு. உ.சாகயம் அவர்கள், தலைமைச் செயலாளர் திரு.மாலதி அண்மையில் பிறப்பித்த உத்தரவின் பேரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘இலஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து’ என்ற அரசின் மாவட்ட முதன்மை ஊழியராகத் திறம்படப் பணியாற்றி தங்களின் ஒவ்வொரு கனவு திட்டத்திற்கும் தன்னையே அர்ப்பணித்து, அதனைத் தமது நாமக்கல் மாவட்டத்தில் திறம்படச் செயல்படுத்தி, மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தங்களின் பாராட்டைப் பெற்றவர். எந்தச் சூழ்நிலையிலும் இலஞ்சம் வாங்காமல், எந்தச் சமயத்திலும், எதற்கும் விலை போகாமல் மிகச் சிறந்த அரசு ஊழியராகப் பணியாற்றி தனது ஆட்சியர் பதவிக்கு அழகும், பெருமையும் சேர்த்தவர். கிராமங்களைத் தேடி, கிராமங்களில் ஏழை எளிய மக்களோடு தங்கி, அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கி, மக்களை அரசோடும், அரசை மக்களோடும் ஒன்றிணைக்க புதுமையான அணுகுமுறையை ‘கிராமங்களில் தங்குவோம்’ என்ற திட்டத்தின் வழியாகக் கடைப்பிடித்தவர்.  மகத்தான மக்கள் பணி செய்து, தாங்கள் கண்ட கனவான கிராம விடியலைச் செயல்படுத்தியவர். மேலும் படிக்க......

உத்தமபுத்திரனுக்கு எதிர்ப்பு – தியேட்டரில் பேனர்கள் கிழிப்பு

கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை கேவலப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி தனுஷ் நடித்துள்ள உத்தமபுத்திரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் நடித்துள்ள நடிகர்கள், இயக்குநர்கள், ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் உத்தமபுத்திரன் சினிமா திரையிடப்பட்டிருந்த தியேட்டரில் இருந்த சினிமா விளம்பர ப்ளக்ஸ் போர்டுகளையும் பேனர்களையும் கிழித்து எறிந்தனர். மேலும் படிக்க....

கந்தசஷ்டி ஸ்பெஷல்

சஷ்டி விரதம் கடைபிடிப்பது எப்படி?
முருகன் கோபம் தணிந்த இடம்
முருகனுக்கு ஐந்து முகம் ஏன்?

மேலும் படிக்க.....

Tuesday, November 9, 2010

உட‌லை வில்லாக‌ வ‌ளைக்கும் இர‌ப்ப‌ர் பெண்ம‌ணி ( வீடியோ)

உட‌லை வில்லாக‌ வ‌ளைத்தும் இர‌ப்ப‌ர் ப‌ந்து போல‌ சுருண்டும் துணிதுவைக்கும் இய‌ந்திர‌த்துக்குள் த‌ன்னையே ம‌டித்துவைத்தும் சாக‌ச‌ம் நிக‌ழ்த்தும் இர‌ஷ்யாவைச் சேர்ந்த‌வ‌ர் இஸ்லாடா(வ‌ய‌து 24) இவ‌ர் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு வயது முதலே உடலை எப்படி வேண்டுமானாலும் வளைக்கும் ஆற்றலைப் பெற்ற இஸ்லாடாவின்  உயரம் 5அடி 9அங்குலம் ஆகும்.

ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள்,துணி துவைக்கும் இயந்திரத்துக்குள் கூட வசதியாக முடங்கிக் கிடக்க இவரால் முடியும்.  மேலும் படிக்க.....

Monday, November 8, 2010

மருத்துவமும் பூக்களும்

நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சில பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது. இந்த பூக்களின் மருத்துவ குணம் அறிந்து நாம் பயன்படுத்தினால் ஒரு சில நோய்களில் இருந்து எளிதாக விடுபடலாமே? இது உங்களுக்கு உதவுகிறதா? என்று பாருங்களேன்…மேலும் படிக்க.....

சிக்கன் 65

முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஆரஞ்சு கேசரி பவுடர், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி, அதில் நறுக்கின சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பிரட்டி 1 மணி நேரம் ஊறவிடவும். மற்றொரு கிண்ணத்தில் தயிர், சிகப்பு கேசரி பவுடர், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, நன்றாக கலந்து வைக்கவும்

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மசாலாவில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டங்களைப் போட்டு பொரித்து எடுக்கவும். அதிகம் சிவக்கவிடாமல் பொன்னிறமாக பொரித்து எடுத்து ஒரு தட்டில் வைத்து எண்ணெய் வடியவிடவும்.   மேலும் படிக்க.....

Sunday, November 7, 2010

குழந்தை வளர்ப்பில் நிலவும் தவறான கருத்துக்கள்

குழந்தை வளர்ப்பதில் சில தாய்மார்கள் சில தவறான பழக்க வழக்கங்களையும் மற்றும் கருத்துகளையும் நடைமுறை படுத்துகிறார்கள். அவைகள் பற்றி சற்று பார்ப்போம்.

1. குழந்தை பிறந்த உடன் கழுதை பால் கொடுக்க வேண்டும் என்ற தவறான வழக்கம் உள்ளது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் கழுதைப் பால் அஜீரணம் ஏற்படலாம்.

2. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும் போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சு உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.

3. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

4. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம் இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்கு பரவும். மேலும் படிக்க....

Wednesday, November 3, 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை அமைப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சபையாக அமையும் அமைச்சரவையினை மக்களுக்கு அறியத் தருவதில் நாம் பெரு மகிழ்வடைகிறோம்.

இவ் அமைச்சரவையானது பிரதமர் தலைமையில் மூன்று துணைப்பிரதமர்களையும், ஏழு அமைச்சர்களையும் உள்ளடக்கிய பதினொரு உறுப்பினர்களைக் கொண்டதாக அமைகிறது. பிராந்திய அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று துணைப் பிரதமர்களுக்கும் ஏழு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள்; ஒதுக்கப்பட்டுள்ளன. இதைவிட ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய துணை அமைச்சர்கள் அந்தந்த அமைச்சர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

துணைப்பிரதமர்களையும் அமைச்சர்களையும் தெரிவு செய்யும் பொறுப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு பிரதமரிடமே வழங்கியிருந்தது. இச் சந்தர்ப்பத்தில் இத் தெரிவு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதனை மக்களுக்கு அறியத்தருவது உகந்தது எனக் கருதுகிறேன்.

ஏற்கெனவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்காலப் பணிகளுக்கான செயற்குழுக்களைத் தெரிவு செய்த போது கடைப்பிடித்த அதே அணுகுமுறையினைப் பின்பற்றி உறுப்பினர்களிடையே அமைச்சர் பதவியைப் பெற்றுப் பணியாற்றும் திறமையும் தகுதியும் கொண்டவர்களை தாமாக முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம். உறுப்பினர்கள,; குறிப்பிட்ட பொறுப்புகளுக்குத் தாங்கள் எவ்வகையில் தகுதியானவர்களெனக் கருதுகிறார்கள் என்பதனை எழுத்து மூலம் முன்வைக்கும்படி கேட்டு இவ் விருப்பத் தெரிவிப்புப் பத்திரத்தில், அவரவர் கல்விப் பின்னணி, மற்றும் வேலை, பட்டறிவுப் பின்னணி, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக அவர்கள் வழங்கியிருந்த பங்களிப்பு, குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக முன்னெடுக்க உத்தேசிக்கும் திட்டங்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக அவர்கள் ஒதுக்கத் தயாராகவுள்ள நேரம் என்ற பல்வேறு விபரங்களை உள்ளடக்கும்படியும் கேட்டிருந்தோம். உற்சாகத்தோடு பலரும் பங்குபற்றி குறிக்கப்பட்ட திகதிக்குள் தமது விபரங்களையும் கருத்துக்களையும் விருப்புக்களையும் அறியத் தந்திருந்தார்கள். மேலும் படிக்க......

Tuesday, November 2, 2010

கலெக்டர் சகாயம் தொடங்கிய, திருச்செங்கோடு உழவன் உணவகம் தொடருமா?

நாமக்கல் கலெக்டராக இருந்த சகாயத்தால் தொடங்கப்பட்ட திருச்செங்கோடு உழவன் உணவகம் அதிகாரிகளின் இடையூறால் தொடர்ந்து நடைபெறுமா? என விவசாயிகள்  சந்தேகமடைந்துள்ளனர்.

விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு  உரிய விலை கிடைக்காமல் தரகர்களே லாபம் பெறுவதை தடுக்கும் பொருட்டு விவசாயிகளையே முதலாளிகாளுக்கும் முயற்சியாக அப்போதைய நாமக்கல் கலெக்டர் சகாயத்தினால்  கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி நாமக்கல் உழவர் சந்தையில் உழவன் உணவகம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தினை மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் தொடங்கி வைத்தார். இதேபோல் அக்டோபர் 23 ம் தேதி திருச்செங்கோடு உழவர் சந்தையிலும் உழவன் உணவகம் விரிவுபடுத்தப்பட்டது.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பூட்டப்பட்ட பொருளாக விற்கும் பொழுது நல்ல லாபம் அடைவார்கள் என்ற நோக்கில் துவங்கப்பட்ட இந்த உழவன் உணவகங்களில் சோளப் பணியாரம், ராகி களி, ராகி தோசை, கீரை இட்லி, அதிரசம்,காய்கறி பக்கோடா, உளுந்தங்கஞ்சி, சுண்டல், ஒப்பிட்டு, ஆட்டுகால் கிழங்கு சூப்பு, கீரை சூப்பு, எள்ளுரண்டை, புட்டு மாவு என பல்வேறு இயற்கையான கிராம உணவு வகைகளை விவசாயிகள் தாங்களே தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

காலை நேரத்தில் காய்கறிகள், பால் வகைகள், நாட்டுக் கோழி என விற்பனை நடைபெறும் உழவர் சந்தை காலை 11 மணியுடன் முடிவடைந்து விடும். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை உழவன் உணவகம் நடைபெறுகிறது.
நாமக்கல், திருச்செங்கோடு உழவன் உணவகத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஓர் ஆண்டு முடிவதற்குள்ளாக ரூ.1.5 கோடி ரூபாய் உணவு பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு சாதனை புரியப்பட்டுள்ளது. மேலும் படிக்க....

நடிகர் பரத்தின் பிரம்மாண்ட பங்களா

இதுவரை சிறிய அளவிலான வீட்டிலேயே வசித்து வந்த நடிகர் பரத் முதன் முறையாக தனது உழைப்பில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சென்னை, சாலிகிராமத்தில் ஒரு பிரம்மாண்டமான பங்களா கட்டி வருகிறாராம்.

அந்த பங்களாவிற்கான இடத்தை ஒன்றரை கோடி கொடுத்து வாங்கி 4 கோடியில் பிரம்மாண்ட பங்களாவை கட்டி முடித்துள்ளாராம். மேலும் படிக்க....

Monday, November 1, 2010

ஆமைவேகத்தில் விருதகிரி - ஏமாற்றத்தில் விஜயகாந்த் ரசிகர்கள்

ஆக்ஷ்ன் ஹீரோ விஜயகாந்த் நடிக்கும் படங்களென்றால் மின்னல் வேகத்தில் வளர்ந்து திரைக்கு வருவதுதான் வாடிக்கை. ஆனால் தற்பொழுது விஜயகாந்த் நடித்து இயக்கி வரும் விருதகிரி படம் வழக்கத்திற்கு மாறாக ஆமை வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.மேலும் படிக்க....