Wednesday, August 31, 2011

நிலமோசடி: திருச்செங்கோடு திமுக நகராட்சி தலைவர் கைது

நாமக்கல், நிலமோசடி புகாரில் திருச்செங்கோடு திமுக நகராட்சி தலைவர் அதிகாலை கைது செய்யப்பட்டார்.இதனால் திருச்செங்கோட்டில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

திருச்செங்கோடு நகரமன்றத்தின் தலைவராக இருப்பவர் நடேசன்.இவர் திமுக திருச்செங்கோடு நகர செயலாளராகவும் இருந்து வருகிறார்.திருச்செங்கோட்டை அடுத்த சித்தாளந்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசுருளி என்ற பெண் விவசாயி கொடுத்த நில ஆக்கிரமிப்பு புகாரின் Read More.....

Monday, August 29, 2011

பழைய மாமல்லபுரம் ரோட்டில் புதிய தலைமை செயலகம் - ஜெயலலிதா முடிவு

புதியதாக ஒரு தலைமை செயலகம் கட்டப்போறதா கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. தற்பொழுது உள்ள கோட்டை அலுவலகம் நிர்வாக வசதிக்கு போதாதுன்னு ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்காங்க. ஆனா கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையா மாற்றி அறிவிச்சிருக்காங்க.இருந்தாலும் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தலைமை Read More....

நடிகர் அஜித்தை வைத்து "மங்காத்தா" ஆடும் கருணாநிதி

நடிகர் அஜித்தின் 50 வது படமான மங்காத்தா ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்குள் பல்வேறு பிரச்சனைகளை அஜித்தின் மங்காத்தா சந்தித்து வருகிறது. மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி இப்படத்தை தயாரித்துள்ளார்.ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்திலும், நடிகர் அஜித்தின் ரசிகர்களிடமும் இருந்து வருகிறது.இதன் எதிரொலியாக படத்தின் பாடல் வெளியீட்டு விழா கூட ஆடம்பரம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.மங்காத்தா படத்தை வெளியிட தமிழக தியேட்டர் அதிபர்கள் தயங்குகின்றனர்.ஆனால் நடிகர் அஜித் இது பற்றியெல்லாம் கவலைப் படாமல் தனது அடுத்த படமான "பில்லா-2" படப்பிடிப்பில் சுறுசுறுப்படைந்துவிட்டார்.பிரச்சனை வருமோ என பயந்த துரை தயாநிதி மங்காத்தாவை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவிற்கு விற்பதாக இருந்தார். இதனை அடுத்து அடுத்த நாள் நாளிழிதள்களில் ஞானவேல் ராஜா வழங்கும் மங்காத்தா என விளம்பரங்கள் வந்தது.ஆனால் ஓவர் நைட்டில் துரை தயாநிதி சன் பிக்சர்ஸ்சுடன் கூட்டு சேர்ந்து மங்காத்தாவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதுடன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவிக்கே விற்கப்பட்டுள்ளது.தற்பொழுது மங்காத்தா படம் குறித்த விளம்பரம் சன் குழும தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.Read More....

Friday, August 26, 2011

பேய்!

இரவு 11.30 மணி இருக்கும், அலுவலகத்தில் இறுதி கட்ட செய்திப் பணியில் ஈடுபட்டிருந்தேன். வெளியே ஐப்பசி அடைமழை அமைதியாக கொட்டிக் கொண்டிருந்தது. ஊரே உறங்கச் சென்ற நேரம்,சாலையில் வாகனங்களின் நடமாட்டம் குறைந்திருந்தது.திடீரென எனது அலுவலக அறையின் கதவு வேகமாக தட்டப்படும் சப்தம் திரும்பிப் பார்த்தால் கண்ணாடிக்கு வெளியே மூன்று இளைஞர்கள் மழையில் முழுவதும் நனைந்து ஈரம் சொட்ட சொட்ட நின்றிருந்தார்கள்.பதட்டத்துடன் காணப்பட்ட அவர்களை நெருங்கினேன்.அதில் ஒரு இளைஞன் எனக்கு அறிமுகமானவன் .

என்ன கார்த்தி.....இந்த நேரத்தில......

அண்ணா.., பேயை பார்த்தோம்......எங்களை துரத்தியது.... 

என மேல் மூச்சு.. கீழ் மூச்சு  வாங்க அந்த இளைஞர்கள் சொன்னபோது எனக்கும் அந்த பதட்டம் தொற்றிக் கொண்டது.

எங்கே?

நம்ம ஊர் ஏரியில அண்ணா....

எப்ப பாத்தீங்க?

இப்பத்தான் அண்ணா....

அந்த பக்கமாக வந்துகிட்டு இருந்தப்ப வெள்ளையா, புகை மாதிரி ஒரு உருவம் இந்த பனைமரத்துக்கும்.. அந்த பனைமரத்துக்கும் தாவிகிட்டு இருந்துச்சு.. நாங்க கிட்ட போயி பாத்தப்ப எங்கள தொரத்த ஆரம்பிச்சுடுச்சு அதான் இங்க ஓடியாந்தோம் என்றனர் அந்த இளைஞர்கள். Read More.....

Monday, August 22, 2011

நில மோசடி புகார், நடிகர் வடிவேல் ரூ.2.25 கோடி நிலத்தை ஒப்படைத்தார்

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரை அடுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேல் ஒப்படைத்தார்.


சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தாசிடம் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 93-ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலிïரில் உள்ள 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார். Read More.....

Sunday, August 7, 2011

திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு ஊழல் செய்தாரா ? - வெளிச்சத்திற்கு கொண்டு வரும் லாரி உரிமையாளர்கள்.

மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த டி.ஆர் பாலு சுங்க வரி விதிப்பில் தனியார் நிறுவனங்களிடம் கோடிக் கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அந்நிறுவனங்களுக்கு சாதகமாக சுங்கவரி வசூல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததாக லாரி உரிமையாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.இந்த விவகாரத்தில் ரூ.40 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்து இருக்கலாம் என்ற பகீர் தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். Read More........

Friday, August 5, 2011

வைகோவிற்காக டெல்லி பயணத்தை ஒத்தி வைத்த கருணாநிதி

முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதாவின் தேசிய தலைவருமான வாஜ்பாய்யை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.அப்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகளையும் நேரில் சந்தித்து தான் தயாரித்துள்ள இலங்கை தமிழர்கள் படுகொலை தொடர்பான சிடிக்களையும் கொடுத்து இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தங்கள் கட்சி சார்பாக Read More.....

Monday, August 1, 2011

ரூ.200 கோடி சிவன் கோவில் சொத்து, கருணாநிதி அபகரித்தாரா?

ரூ.200 கோடி மதிப்புள்ள சிவன் கோவில் சொத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக போலீஸ் கமிஷனிரடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவன் சொத்து குல நாசம் தெரியாதோ.....?

சரி இன்னைக்கத்த இரண்டு தகவலுக்கு வருவோம்...... Read More.....

மதுரை போலீஸ் அத்துமீறல், துப்பாக்கி காட்டி மிரட்டியதால் பொதுமக்கள் ஆவேசம்

திருச்செங்கோட்டில் குற்றவாளியை பிடிக்க வந்த மதுரை போலீசார் பொதுமக்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதால் ஆவேசமடைந்ததால் பொதுமக்கள் மதுரை போலீசாரை முற்றுகையிட்டு தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் கடந்த வாரம்  சோழவந்தான் தொகுதியில் பாமாக சார்பில் போட்டியிட்ட இளஞ்செழியன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கு தொடர்பாக மதுரை எஸ்.எஸ்.காலனி சி3 போலீஸ் ஸ்டேசன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடிவருகின்றனர். Read More......