Wednesday, November 3, 2010

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை அமைப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சபையாக அமையும் அமைச்சரவையினை மக்களுக்கு அறியத் தருவதில் நாம் பெரு மகிழ்வடைகிறோம்.

இவ் அமைச்சரவையானது பிரதமர் தலைமையில் மூன்று துணைப்பிரதமர்களையும், ஏழு அமைச்சர்களையும் உள்ளடக்கிய பதினொரு உறுப்பினர்களைக் கொண்டதாக அமைகிறது. பிராந்திய அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்று துணைப் பிரதமர்களுக்கும் ஏழு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள்; ஒதுக்கப்பட்டுள்ளன. இதைவிட ஒவ்வொரு அமைச்சுக்குமுரிய துணை அமைச்சர்கள் அந்தந்த அமைச்சர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

துணைப்பிரதமர்களையும் அமைச்சர்களையும் தெரிவு செய்யும் பொறுப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு பிரதமரிடமே வழங்கியிருந்தது. இச் சந்தர்ப்பத்தில் இத் தெரிவு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பதனை மக்களுக்கு அறியத்தருவது உகந்தது எனக் கருதுகிறேன்.

ஏற்கெனவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்காலப் பணிகளுக்கான செயற்குழுக்களைத் தெரிவு செய்த போது கடைப்பிடித்த அதே அணுகுமுறையினைப் பின்பற்றி உறுப்பினர்களிடையே அமைச்சர் பதவியைப் பெற்றுப் பணியாற்றும் திறமையும் தகுதியும் கொண்டவர்களை தாமாக முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம். உறுப்பினர்கள,; குறிப்பிட்ட பொறுப்புகளுக்குத் தாங்கள் எவ்வகையில் தகுதியானவர்களெனக் கருதுகிறார்கள் என்பதனை எழுத்து மூலம் முன்வைக்கும்படி கேட்டு இவ் விருப்பத் தெரிவிப்புப் பத்திரத்தில், அவரவர் கல்விப் பின்னணி, மற்றும் வேலை, பட்டறிவுப் பின்னணி, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக அவர்கள் வழங்கியிருந்த பங்களிப்பு, குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக முன்னெடுக்க உத்தேசிக்கும் திட்டங்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக அவர்கள் ஒதுக்கத் தயாராகவுள்ள நேரம் என்ற பல்வேறு விபரங்களை உள்ளடக்கும்படியும் கேட்டிருந்தோம். உற்சாகத்தோடு பலரும் பங்குபற்றி குறிக்கப்பட்ட திகதிக்குள் தமது விபரங்களையும் கருத்துக்களையும் விருப்புக்களையும் அறியத் தந்திருந்தார்கள். மேலும் படிக்க......

No comments:

Post a Comment