Monday, August 29, 2011

நடிகர் அஜித்தை வைத்து "மங்காத்தா" ஆடும் கருணாநிதி

நடிகர் அஜித்தின் 50 வது படமான மங்காத்தா ஆகஸ்ட் 31 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்குள் பல்வேறு பிரச்சனைகளை அஜித்தின் மங்காத்தா சந்தித்து வருகிறது. மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி இப்படத்தை தயாரித்துள்ளார்.ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்திலும், நடிகர் அஜித்தின் ரசிகர்களிடமும் இருந்து வருகிறது.இதன் எதிரொலியாக படத்தின் பாடல் வெளியீட்டு விழா கூட ஆடம்பரம் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.மங்காத்தா படத்தை வெளியிட தமிழக தியேட்டர் அதிபர்கள் தயங்குகின்றனர்.ஆனால் நடிகர் அஜித் இது பற்றியெல்லாம் கவலைப் படாமல் தனது அடுத்த படமான "பில்லா-2" படப்பிடிப்பில் சுறுசுறுப்படைந்துவிட்டார்.பிரச்சனை வருமோ என பயந்த துரை தயாநிதி மங்காத்தாவை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவிற்கு விற்பதாக இருந்தார். இதனை அடுத்து அடுத்த நாள் நாளிழிதள்களில் ஞானவேல் ராஜா வழங்கும் மங்காத்தா என விளம்பரங்கள் வந்தது.ஆனால் ஓவர் நைட்டில் துரை தயாநிதி சன் பிக்சர்ஸ்சுடன் கூட்டு சேர்ந்து மங்காத்தாவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதுடன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவிக்கே விற்கப்பட்டுள்ளது.தற்பொழுது மங்காத்தா படம் குறித்த விளம்பரம் சன் குழும தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.Read More....

No comments:

Post a Comment