Friday, August 26, 2011

பேய்!

இரவு 11.30 மணி இருக்கும், அலுவலகத்தில் இறுதி கட்ட செய்திப் பணியில் ஈடுபட்டிருந்தேன். வெளியே ஐப்பசி அடைமழை அமைதியாக கொட்டிக் கொண்டிருந்தது. ஊரே உறங்கச் சென்ற நேரம்,சாலையில் வாகனங்களின் நடமாட்டம் குறைந்திருந்தது.திடீரென எனது அலுவலக அறையின் கதவு வேகமாக தட்டப்படும் சப்தம் திரும்பிப் பார்த்தால் கண்ணாடிக்கு வெளியே மூன்று இளைஞர்கள் மழையில் முழுவதும் நனைந்து ஈரம் சொட்ட சொட்ட நின்றிருந்தார்கள்.பதட்டத்துடன் காணப்பட்ட அவர்களை நெருங்கினேன்.அதில் ஒரு இளைஞன் எனக்கு அறிமுகமானவன் .

என்ன கார்த்தி.....இந்த நேரத்தில......

அண்ணா.., பேயை பார்த்தோம்......எங்களை துரத்தியது.... 

என மேல் மூச்சு.. கீழ் மூச்சு  வாங்க அந்த இளைஞர்கள் சொன்னபோது எனக்கும் அந்த பதட்டம் தொற்றிக் கொண்டது.

எங்கே?

நம்ம ஊர் ஏரியில அண்ணா....

எப்ப பாத்தீங்க?

இப்பத்தான் அண்ணா....

அந்த பக்கமாக வந்துகிட்டு இருந்தப்ப வெள்ளையா, புகை மாதிரி ஒரு உருவம் இந்த பனைமரத்துக்கும்.. அந்த பனைமரத்துக்கும் தாவிகிட்டு இருந்துச்சு.. நாங்க கிட்ட போயி பாத்தப்ப எங்கள தொரத்த ஆரம்பிச்சுடுச்சு அதான் இங்க ஓடியாந்தோம் என்றனர் அந்த இளைஞர்கள். Read More.....

No comments:

Post a Comment