ஐதராபாத், மோசடி புகாரில் சிக்கிய சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூவின் ஜாமீனை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்திருப்பதை தொடர்ந்து, ஆந்திர சிறைச்சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் பிசினஸ் புராசஸ் அவுட்சோர்சிங் (பி.பீ.ஓ.) சென்டரை வழிநடத்திச் செல்ல ராஜூவின் நிர்வாகத் திறமையை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஊழல் புகாரில் சிக்கிய சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூ கடந்த ஆண்டு சிபிஐயால் கைது செய்யப்பட்டார். நீண்ட சிறைவாசத்துக்குப்பின் கடந்த மாதம் ஐதராபாத் ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் இந்த மனுவை விசாரித்து, சத்யம் ராஜூவின் ஜாமீனை ரத்து செய்து தீர்ப்பளித்தது. நவம்பர் 8ம் தேதிக்குள் சரணடையுமாறு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment