Friday, December 24, 2010

குடும்பத் தகராறில் விபரீதம்: இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு, இரண்டு குழந்தைகள் பலி

திருச்செங்கோடு அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிருடன் மீட்கப்பட்டார். கிணற்றில் வீசப்பட்ட குழந்தைகள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தன. திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரமங்கலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(40) டெய்லர். இவரது மனைவி வசந்தி(30) நிதிஷ்(10), பரணி(8) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தன.தற்பொழுது சேகர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு நாமக்கல் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய வசந்தி தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் குமாரமங்கலம் பாண்டீஸ்வரன் கோவில் தெருவிற்கு வந்தாராம்.

No comments:

Post a Comment