சென்னையில் உள்ள “3 ஆர் குரூப்’’ என்ற மசாஜ் நிறுவனத்தில் வேலை இருப்பதாக அறிந்து அதன் உரிமையாளர்கள் ரவீந்திரா, இம்மானுவேல், ரமேஷ் ஆகியோரை அணுகினோம். அவர்களும் மாதம் ஸி 25 ஆயிரம் சம்பளம், 8 மணி நேர வேலை, தங்குமிடம் இலவசம், கூடுதல் நேரம் வேலைக்கு சம்பளம் என கூறினர். இதை நம்பி கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்ந்தோம். எங்களை திநகர், திருமூர்த்தி நகரில் ஒரு வீட்டில் தங்க வைத்தனர். தாய் மசாஜ் தெரபிஸ்ட் என்ற படிப்பை படித்து இருக்கிறோம். அதனால் மசாஜ் செய்வதில் நாங்கள் திறமையானவர்கள்.
வடபழனி, தியாகராய நகர் போன்ற இடங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு மசாஜ் செய்து வந்தோம். கொஞ்ச நாட்கள் ஒழுங்காக சம்பளம் கொடுத்தனர். திடீரென வாடிக்கையாளர்களில் சிலர் மசாஜ் செய்யும்போது எங்களிடம் தவறாக நடக்க முயன்றனர். எங்களை பாலியலுக்கு உடன்படும்படி வற்புறுத்தினர்.... மேலும் படிக்க......

No comments:
Post a Comment