Friday, December 3, 2010

மஞ்சுளாவை குடிகாரி ஆக்கியது யார்? எனது அக்காவின் காதலனை எரித்து கொன்றது யார்? - விஜயகுமாருக்கு வனிதா கேள்வி

எனது தாய் மஞ்சுளாவை எந்த நேரமும் தள்ளாட்டத்தில் இருக்கும்படி நிரந்தர குடிகாரி ஆக்கியது யார்? எனது அக்கா கவிதாவின் காதலன் சாந்தகுமாரை அமெரிக்காவில் தீயிட்டு கொன்றது யார்? என கேள்விகளை கேட்டு நடிகை வனிதா அதிரடித்துள்ளார்.

தொடர்ந்து பத்தாவது நாளாக நடிகர் விஜயகுமார் வீட்டு மானம் கப்பல் ஏறுகிறது. இத்தனை நாட்கள் போலிசுக்கு பயந்து ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகர் விஜயகுமார் நேற்று மாலை சென்னையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.இது நடிகை வனிதாவிற்கு ஆத்திரத்தைமூட்டியது. உடனடியாக அவரும் தனது பங்கிற்கு செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்தார். முதலில் கண்ணீரும் கம்பலையுமாக ஆரம்பித்த அவரது பேட்டி பின்னர் சூடுபிடித்தது. இந்த பேட்டியின் பொழுது வனிதா கூறியதாவது:-

எனது மகன் ஸ்ரீஹரியை இழுத்து வந்துவிட்டேன் என்று விஜயகுமார் கூறியிருக்கிறார். அவன் என் மகன் யாருடன் இருக்க வேண்ட்உம் என்று முடிவு செய்ய வேண்டியது நானே. அவனிடமே கேள்வி கேளுங்கள். 9 வயது பையனின் வாழ்க்கை பாதிக்க கூடாது என்பதற்காக அவனை இதுவரை உங்களிடம் காட்டவில்லை ( தாய்தான் பிடிக்கும் என்கிறான் சிறுவன்)  மேலும் படிக்க....

No comments:

Post a Comment