Friday, December 3, 2010

மார்ச் 2 -ல் ப்ளஸ்டூ தேர்வு, மார்ச் 28 -ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு – அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் பிளஸ்-2 பரீட்சை மார்ச் 2-ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை மார்ச் 28-ந் தேதியும், மெட்ரிகுலேஷன் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் மார்ச் 22-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ளது.

பிளஸ்-2 தேர்வை 7 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் 1,850 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 6,520 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சம் மாணவ-மாணவிகள் 2,800 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். மெட்ரிகுலேஷன் தேர்வை ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1,600 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4,500 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

எல்லா தேர்வுகளிலும் சேர்த்து மொத்தம் 17 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.

இந்த தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வமான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க....

No comments:

Post a Comment