திருச்செங்கோடு அடுத்துள்ள கருவேப்பம்பட்டி, கொன்னக்காடு பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஆண்டு தோறும் தை அல்லது மாசி மாதம் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம் போல் கடந்த 11 ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனையடுத்து தீர்த்த குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் என பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை குண்டம் திருவிழா நடைபெற்றது.மாலையிட்டு விரதமிருந்த நூற்றுக் கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். இதனையடுத்து பூங்கரகம் நிகழ்ச்சி நடைபெற்றது. பகவதி அம்மன் கோவில் அருகே இருந்து பூங்கரகம் எடுத்து கொண்டு பூசாரிகள் ஆடி வந்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சப்பாரத்தில் கொண்டு வரப்பட்டது. சப்பாரத்தின் இரு பக்கமும் புதியதாக செய்யப்பட்ட வீச்சரிவாளுடன் மற்ற பூசாரிகள் ஆடிவந்தனர். ஊர் எல்லைப் பகுதியில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்காக ஆடு மற்றும் கோழிகளுடன் காத்திருந்தனர். Read More..........
No comments:
Post a Comment