Sunday, May 13, 2012

நாடாளுமன்றத்தின் 60 வது ஆண்டு விழா, மூத்த உறுப்பினருக்கு அழைப்பு இல்லை - காங்கிரசார் அதிருப்தி.

நாடாளுமன்றத்தின் 60 வது ஆண்டு விழாவிற்கு இந்தியாவின் முதல் பாராளுமன்றமான அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினருக்கு அழைப்பு அனுப்படாததற்கு திருச்செங்கோடு நகர காங்கிரசார் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

திருச்செங்கோட்டை அடுத்துள்ள குமாரமங்கலம் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவரும் சென்னை மாகணத்தின் முதல்வராக இருந்த டாக்டர் சுப்ராயனின் உறவினருமான டி.எம்.காளியண்ணன்(92) 1949ல் இந்தியாவின் முதல் பாராளுமன்றமாக கருதப்படும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக பதவி வகித்தவர். திருச்செங்கோட்டில் தற்பொழுது வசித்து வரும் அவருக்கு நேற்று டெல்லியில் நடந்த நாடாளுமன்றத்தின் 60 வது ஆண்டு விழாவிற்கு அழைப்பு அனுப்படாததுடன், அவரை கவுரவப்படுத்தாதற்கும் காங்கிரசார் கண்டணம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து முன்னாள் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் தெரிவித்ததாவது: Read More...

No comments:

Post a Comment