‘மாதொருபாகன்’ என்னும் பெயரைக் கேட்டதும் நண்பர் ஒருவர் ‘சைவ நெடியடிக்கும் தலைப்பு’ என்றார். உண்மைதான். இது சிவனின் பெயர்களுள் ஒன்று. பெண்ணுக்குத் தம் இடப்பாகத்தைக் கொடுத்து ஆண் பாதி பெண் பாதி எனக் காட்சி தரும் அர்த்தநாரீசுவர வடிவத்தைக் குறிக்கும் பெயர். அர்த்தநாரீசுவரன், அம்மையப்பன், மங்கைபங்கன் ஆகிய பெயர்களும் இதே பொருளைத் தருவன. எனினும் எனக்குள் ஒருவித மயக்கத்தை உருவாக்கிய பெயர் ‘மாதொருபாகன்.’ பொதுவாக நாவலை முடித்த பிறகே தலைப்பை யோசிப்பது என் வழக்கம். ஆனால் இந்நாவலை எழுதத் தொடங்கும் முன்பே தலைப்பு எனக்குள் தோன்றிவிட்டது. எனினும் அதை ஒத்தி வைத்துவிட்டுப் பல தலைப்புகளை யோசித்துக் கொண்டிருந்தேன். எனினும் இதற்கு ஈடான நிறைவை வேறு எதுவும் தரவில்லை. Read More.....

No comments:
Post a Comment